செல்போன் பயன்படுத்துவோருக்கு 'குட் நியூஸ்': அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் கிடையாது

இந்தியாவில் பல மாநிலங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் மாநில எல்லையை கடக்கும் போது, செல்போன் பயன்படுத்தினால் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போது, தங்களின் நிரந்தர செல்போன் நம்பரை மாற்ற வேண்டியுள்ளது. தொழில், படிப்பு என்ற பல்வேறு காரணங்களுக்காக, பல மாநிலங்களுக்கு செல்லும் நபர்களுக்கு, இது ஒரு பெரிய தலைவலியாக உள்ளது.
இந்த நிலையில் செல்போன் பயன்படுத்துவோரின் பிரச்சனையை நீக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள செல்போன்களுக்கு ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வது குறித்த திட்டத்திற்கு, மத்திய அரசு கடந்த மே மாதம் அனுமதி அளித்தது. ஆனால் அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இந்திய இன்டர்நெட் ஆளுகை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு மத்திய அமைச்சர் கபில் சிபில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து செய்யும் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கபில்சிபில் கூறியதாவது,
அடுத்த ஆண்டில் இருந்து நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும். இது குறித்து தொலைத்தொடர் துறையினர் ஏற்கனவே அறிவி்த்துவிட்டார்கள் என்றார்.
இது குறித்து ஜி.எஸ்.எம் தொழிற்துறை சி.ஓ.ஏ.ஐ இயக்குனர் ராஜன்.எஸ்.மேத்யூஸ் கூறியதாவது,
நாடு முழுவதும் ரோமிங் அற்ற செல்போன் சேவை பாராட்டத்தக்கது. ஆனால் அதை நாடு முழுவதும் அமல்படுத்தினால், செல்போன் கட்டணங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. இது குறித்து இந்திய தொலைத்தொடர்பு அமைப்பான 'டிராய்' உடன் ஆலோசித்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications