அமைச்சரவை மாற்றம்- பிரதமர் மன்மோகன்சிங்குடன் சோனியா இன்று ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகிய நிலையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த அமைச்சரவை மாற்றம் ஓரிருநாட்களில் நடைபெறக் கூடும் என்று கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 26,27 ஆகிய நாட்களில் டெல்லியில் இல்லை என்பதால் அனேகமாக நாளையோ அல்லது 28-ந் தேதியோ அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படக் கூடும் எனத் தெரிகிறது.
இதனிடையே அமைச்சரவை மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்.
மேற்குவங்கம், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications