சென்னையில் இன்று தா. பாண்டியன் 80-ம் ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியனின் 80-ம் ஆண்டு விழா சென்னையில் இன்று கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் செயலாளர் தா.பாண்டியன் 80-ம் ஆண்டு விழா இன்று மாலை 4 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தேசிய மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
தா.பாண்டியனின் அரசியல் மற்றும் இதர மக்கள் பணிகள் அனைத்தையும் பதிவு செய்து வெளிக்கொண்டுவரும் பொருட்டு சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications