மகாராஷ்டிரா நீர்ப்பாசன திட்ட ஊழல்- கட்காரிக்கும் தொடர்பு.. வாயை கொடுத்து வலையில் சிக்கினார்!

மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தியிருக்கிறது நீர்ப்பாசனத் திட்ட ஊழல். இந்த விவகாரத்தில் துணை முதல்வர் அஜித் பவார் தமது பதவியை ராஜினா செய்தார். நீர்ப்பாசனத் திட்ட ஊழல் தேசியவாத காங்கிரசில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் ஊழலுக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த அஞ்சலி தமனியா என்பவர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அறிக்கையில் சொன்னது என்ன?
அஞ்சலி தமனியா வெளியிட்ட அறிக்கையில், மகாராஷ்டிராவின் நீர்ப்பாசன திட்ட ஊழலுக்கு எதிராக போராடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் மறுத்துவிட்டார். இதற்குக் காரணம் தேசியவாத காங்கிரசாருடன் அவருக்கு உள்ள வர்த்தக தொடர்புகள்தான் என்று பொத்தாம் பொதுவாகத்தான் கூறியிருந்தார்.
வாயைக் கொடுத்த கட்காரி..
அஞ்சலி தமனியாவின் அறிக்கையைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தாம் ஒருபோதும் அஞ்சலி தமனியா என்பவரை சந்திக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இத்தனைக்கு அஞ்சலி தமனியா, நிதின் கட்காரி பெயரை தமது அறிக்கையில் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாகத்தான் கூறியிருந்தார்.
வலையில் சிக்கினார்
கட்காரியின் விளக்க அறிக்கையால் வெகுண்டெழுந்த அஞ்சலி தமனியா பதிலடி கொடுத்திருக்கிறார்.
அஞ்சலி தமனியாவின் பதிலறிக்கையில், நிதின் கட்காரியை அவரது மும்பை இல்லத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி காலையில் சுமார் 10 மணியளவில் சந்தித்ததாக அஞ்சலி தமனியா கூறியுள்ளார்.
அப்போது இந்த நீர்ப்பாசனத் திட்ட ஊழல்களை பொதுமக்களின் நலன் கருதி அவரிடம் விவரித்தேன். அதற்கு கட்காரி, தமது கட்சியின் சோமையாவிடம் பொதுநல வழக்கு எதுவும் போட வேண்டாம். பொதுவாக பேரவையிலோ அல்லது பிரஸ் மீட்டிலோ சொல்லிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதாக தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அதன் பின்னர் அன்று இரவு, நிதின் கட்காரியின் பெர்சனல் எண்ணுக்கு அவரது நிலைப்பாட்டினால் நாட்டுக்கு பெரும் பின்னடைவு என்று அதில் மெசேஜ் அனுப்பிவிட்டேன். நிதின் கட்காரியின் பெயரைக் கூட நான் முதலில் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் பொய் பேசியதால்தான் இப்பொழுது உண்மையை சொல்கிறேன் என்று கொந்தளித்துவிட்டார் தமனியா.
ஆக வாயைக் கொடுத்து வலையில் சிக்கிய கதையோ கையும் களவுமாக சிக்கிய கதையோ கட்காரிக்கு கன கச்சிதமாக பொருந்துதே!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications