மோசடி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: பரிதி இளம்வழுதி மீது வழக்கு பதிய ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லிவாக்கம் தர்மதோப்பு அறக்கட்டளையின் அறங்காவலர் எஸ்.ரங்கா ரெட்டி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் வில்லிவாக்கம் தர்மதோப்பு அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளேன். எங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமாக 7.45 ஏக்கர் நிலம், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, கடந்த 1875ம் ஆண்டு அரசால் வழங்கப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உதவியுடன், அவரது உதவியாளர் காக்கரின் மற்றும் வாசு ஆகியோர் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து அறக்கட்டளையின் 5.5 ஏக்கர் நிலத்தை ஜோஷி என்ற கட்டுமான நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டனர்.
நிலத்திற்கு போலி பட்டா தயாரிக்க தாசில்தாரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த மோசடி குறித்து கடந்த 10.7.2010 அன்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலி பட்டாவை ரத்து செய்யக் கோரி தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளேன்.
இது குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த மோசடியில் பரிதி இளம்வழுதி, அவரது உதவியாளர் காக்கரின், திமுக பிரமுகர் வாசு ஆகியோர் உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே எனது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம்மனுவை நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரித்தார். இது குறித்து பதில் அளிப்பதற்கு அரசு தரப்பில் அவகாசம் கேட்டதை அடுத்து மனு மீதான விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications