முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை மீண்டும் கைது செய்ய போலீஸ் தீவிர தேடுதல்

ஜாமீனில் நேரு..
திருச்சி மாவட்ட திமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு மீது நில அபகரிப்பு புகார்கள் சில மாதங்களுக்கு முன்பு பதிவாகின. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததால் நேரு தற்போது வெளியே உள்ளார்.
புது புகார்
இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த சகுனவேல் அரியலூர் காவல்துறையில் கடந்த
25-ந் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில் தமது 17 ஏக்கர் நிலத்தை கே.என். நேருவின் உறவினர்களான கீழப்பழூர் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்தை மதிப்பை விட குறைவான விலைக்கு மிரட்டி வாங்கிக் கொண்டனர். நேருவின் தூண்டுதலாலேயே ரூ5 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ50 லட்சத்துக்கு மிரட்டி வாங்கினர் என்று சகுனவேல் புகார் கொடுத்திருந்தார்.
தகவல் பாஸ்.. தல எஸ்கேப்
இதையடுத்து திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராக நேரு வந்தால் தூக்கிவிடலாம் என்று காத்திருந்தது போலீஸ் டீம். ஆனால் தகவல் நேருவுக்கு பாஸ் செய்யப்பட அவர் ஆஜராகாமல் எஸ்கேப்பாகிவிட்டார். நேரு மனைவி மட்டும் இந்த வழக்கில் ஆஜரானார்.
முன்ஜாமீன் மனு?
நேருவை கோட்டை விட்டுவிட்ட போலீசார் அவரது இருப்பிடத்தைக் கண்டறிய தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் நேரு சார்பில் முன் ஜாமீன் கோரி இன்று மனுத்தாக்கல் செய்யப்படக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications