For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக வரலாற்றிலேயே முதன் முறையாக 2வது தடவை தலைவரான கட்காரி

By Siva
Google Oneindia Tamil News

Nitin Gadkari
டெல்லி: பாஜக தலைவர் நிதின் கட்காரி முறைப்படி இரண்டாவது முறையாக கட்சியின் தலைவராக வரத் தேவையான கட்சி சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இரண்டாவது முறையாக பாஜக தலைவராகிறார்.

பாஜக தலைவர் நிதின் கட்காரியின் பதவி காலம் வரும் டிசம்பர் மாதத்தில் முடிவடைவதையடுத்து அவரை இரண்டாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்க கட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான தீர்மானம் மும்பையில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து ஹரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நடந்து வரும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தகுதியுடைய ஒருவர் இரண்டாவது முறையாக கட்சியின் தலைவர் பதவிக்கு வரலாம் என்ற சட்டத் திருத்தத்திற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடு்த்து கட்காரி இரண்டாவது முறையாக பாஜக தலைவராகிறார்.

அவரது பெயரை பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். கட்காரி வரும் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த பதவியில் இருப்பார் என்பது குறி்ப்பிடத்தக்கது.

இதற்கிடையே மகாராஷ்டிரா நீர்ப்பாசன் ஊழல் விவகாரத்தில் கட்காரியின் பெயர் அடிபடுகிறது என்பது குறி்ப்பிடத்தக்கது.

English summary
BJP national council has given nod to the amendment to Section 21 of the Bharatiya Janata Party's constitution says that any eligible member can hold the post of the president for two consecutive terms of three years each. So, Nitin Gadkari is becoming the party president for the second consecutive term.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X