பாபநாசம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Subscribe to Oneindia Tamil

துரைக்கண்ணன் தனது குடும்பத்தினருடன் பாபநாசம் அருகில் உள்ள ராஜகிரியில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் செவ்வாய்கிழமை இரவு அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வாக துரைக் கண்ணன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications