வங்கக்கடலில் 'லோ பிரஷர்', கன மழை வரும்.. ரமணன் சொல்கிறார்!

Subscribe to Oneindia Tamil

Low pressure in Bay of Bengal
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிக இடங்களில் மழை பெய்யும். வடக்கு தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஆந்திராவை ஒட்டிய பகுதியில் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் அதிக இடங்களில் மழை பெய்யும். வட தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரை மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவையில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக உளுந்தூர்பேட்டையில் 8 செ.மீ. மழையும், ஆலங்குடி, பரமக்குடி, தாளவாடி, முதுகளத்தூரில் 7 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+