காதல் மனைவிக்கு டெங்கு ...வேதனையில் சாப்ட்வேர் என்ஜினியர் தற்கொலை
கோவை: காதலித்துத் திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு டெங்கு காய்ச்சல் வந்து அவர் அவதிப்பட்டதைப் பார்த்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் மன வேதனை அடைந்து மருத்துவமனையின் 6வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்நதவர் 26 வயதான பிரேமச்சந்திரன். இவர் ராதிகா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். காதலித்து மணம் புரிந்தவர் என்பதால் மனைவி மீது அதிக பாசத்துடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராதிகாவுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தார் பிரேமச்சந்திரன். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மனைவி டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதைப் பார்த்து வேதனை அடைந்தார் பிரேமச்சந்திரன். அவரால் மனைவி கஷ்டப்படுவதைப் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில், நேற்று பிற்பகல் மருத்துவமனையின் 6வது மாடிக்குச் சென்ற பிரேமச்சந்திரன் அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications