உஷ்.. அப்பப்பா, அக்டோபரில் கருணாநிதி தலைமையில் மீண்டும் டெசோ கூட்டம்!
Subscribe to Oneindia Tamil

இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வருகிற அக்டோபர் 3ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறும். இதில் டெசோ உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீர்மான நகலை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஐ.நா. சபையில் சமர்பிக்கவிருக்கிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications