நானே.. நானே தான் செய்தேன்.. மண்டபத்துல யாரும் சொல்லித் தரலை!: 'தருமி' ஸ்டைலில் பிரதமர் பதில்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்கா சென்று வந்த பின் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதன்மூலம் அமெரிக்க நெருக்கடியால் தான் சில்லறை வணிகத்தில் இந்தியா அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இந் நிலையில் இந்தக் குற்றச்சாட்டை பிரதமர் மறுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.எச்.கபாடியா நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி மாளிகை வந்த பிரதமர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவுக்காக இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவில்லை. மற்றவர்கள் கூறுவதை மத்திய அரசு செய்யாது. நாட்டுக்கு எது சிறந்ததோ, அதையே மத்திய அரசு செய்யும். மத்திய அரசு பிற நாடுகளுக்காக பணியாற்றவில்லை.
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும். இது தொடர்பான கூட்டணிக் கட்சிகளின் கவலைகளை அவர்களுடன் பேசிக் களைவோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications