கன்னட அமைப்புகள் போராட்டம்: முன்னெச்சரிக்கையாக தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அதை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றமும் பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணைய உத்தரவை நடைமுறைப்படுத்த உடனே காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று காட்டம் காட்டியுள்ளது.
இதனிடையே காவிரி நீரை தமிழகம் கோரியது முதல் மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் கன்னட அமைப்பினர் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழக - கர்நாடக எல்லையில் தமிழகத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி எல்லை வழியாக கர்நாடகம் செல்லக் கூடிய அனைத்து தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களும் தமிழக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் ஏதேனும் நடந்துவிடக் கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் எல்லையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் எல்லையில் பதற்றமான நிலைமை காணப்படுகிறது.
அதே நேரத்தில் ஒசூர் வழியாகச் செல்லும் தமிழக வாகனங்கள் பெங்களூருக்குள் சென்று வந்து கொண்டுள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications