வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் இன்று மழை
சென்னை: வங்க கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாலும், வெப்ப சலனம் காரணமாகவும், இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை செய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த புதன்கிழமை சென்னையில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் வங்க கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாலும், வெப்பசலனம் காரணமாகவும் இன்று தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது,
வங்க கடலில் ஆந்திர மாநிலத்தையெட்டிய பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்பச்சலனம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்யலாம். சில இடங்களில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று உளுந்தூர்பேட்டையில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆலங்குடி, முதுகுளத்தூர், பரமக்குடி, தாழவாடி ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும், ஒரத்தநாட்டில் 6 செ.மீ. மழையும், லால்குடி, கந்தர்வக்கோட்டை, அரிமளம், திருச்செங்கோடு தலா 5 செ.மீ மழையும் பதிவானது.
தம்மம்பட்டி, சங்ககிரி, காரைக்குடி, கீரனூர், பெருங்களூர், சாத்தனூர் அணை, தருமபுரி, அஞ்சட்டி, பரூர், கரூர் பரமத்தி, தாராபுரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழையும், விருத்தாசலம், பாம்பன், ராமேஸ்வரம், ஓமலூர், திருப்புவனம், போளூர், செங்கம், பாப்பிரெட்டிப்பெட்டி, திருவையாறு, சமயபுரம், மருங்காபுரி, புள்ளம்பாடி, பெருந்துறை, புதுக்கோட்டை, வாணியம்பாடி, சூளகிரி தலா 3 செ.மீ மழையும் பதிவானது என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications