அப்ப கேட்டீங்களா, இப்ப மட்டும் ஏன் கேக்குறீங்க... அழகிரி டென்ஷன்!
Subscribe to Oneindia Tamil

மதுரையிலிருந்து சென்னைக்கு இன்று வந்த மு.க.அழகிரியிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்துக் கேட்டபோது, தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 16 மணி நேரம் ஏற்பட்டுள்ள மின்வெட்டால் தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது என்றார்.
திமுக கூட்டியுள்ள செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு கலந்து கொள்வேன் என்று பதிலளித்தார்.
கிரானைட் சுரங்க முறைகேடுகள் குறித்த கேள்விக்கு, இதுகுறித்து பத்திரிகைகளில் விலாவாரியாக செய்திகள் வெளியிடப்பட்டன. அப்போது என்னிடம் கேட்டா செய்தி வெளியிட்டீர்கள். இப்போது ஏன் அதுகுறித்து என்னிடம் கேட்கிறீர்கள் என்று கூறி விட்டு பொசுக்கென்று காரில் ஏறிப் போய் விட்டார் அழகிரி.












Click it and Unblock the Notifications