ரிட்டையரானார் டிஜிபி விஜயகுமார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய ஆயுதப் படை போலீஸ் டிஜிபியான விஜயகுமார் நேற்று பணி ஓய்வு பெற்றார். புதிய ஆயுதப் படை போலீஸ் டிஜிபி யார் என்பது இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மத்திய ஆயுதப்படை போலீஸ் டி.ஜி.பி.யாக தமிழகத்தைச் சேர்ந்த கே.விஜயகுமார் பணியாற்றி வந்தார். இவர் தமது பதவியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். இவரது பதவி காலத்தில்தான், மே.வங்காளத்தில் நக்சலைட்டுகளின் தலைவராக செயல்பட்ட கிஷன்ஜியை மத்திய ஆயுதப்படை போலீசார் சுட்டுகொன்றனர். அவருக்கு பதில் புதிய டி.ஜி.பி. இன்னும் நியமிக்கப்படாததால், கூடுதல் டி.ஜி.பி.யிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார்.
தமது ஓய்வு காலத்தில் வீரப்பன், அயோத்தியாகுப்பம் வீரமணி ஆகியோர் பற்றிய நூல்களை எழுதப் போவதாக தெரிவித்திருந்தார் விஜயகுமார்.












Click it and Unblock the Notifications