காவிரி நீர்.. கண்ணீர் விட்டு அழுத தேவ கெளடா!

பெங்களூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று முன் தினம் பேட்டியளித்தபோது அவர் அழுதார்.
அவர் கூறுகையில், காவிரி பிரச்சனையில் கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநில விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
இந்த நிலையில், காவிரி பிரச்சனைக்கு சுமூகமான முறையில் அதாவது இரு மாநிலங்களுக்கும் ஏற்ற வகையில் முடிவை வெளியிடாமல் பிரதமர் ஒருதலைபட்சமாக முடிவை அறிவித்து இருப்பது அரசியல் நோக்கம் என்று கருதுகிறேன்.
என்றாலும், பிரதமரின் முடிவுக்கு கட்டுப்பட்டும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி தமிழகத்துக்கு காவிரியில் செவ்வாய்கிழமை வரை 3 நாட்கள் தண்ணீர் திறந்து விடலாம்.
தமிழகத்துக்கு தண்ணீர் விடப்படும் இந்த 3 நாட்களும் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று அவர் கண்ணீர் விட்டு அழுதார். காவிரி நீர் இவ்வாறு விவாதத்துக்குரிய விஷயமாகி விட்டதே என்பதை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது என்றவாறு கண்களைத் துடைத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications