ரூ1880 கோடிக்கு வைத்தியம் பார்த்த சோனியா! யார் பணம் கட்டுனது?: வரிந்து கட்டும் மோடி, சு.சாமி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மத்திய அரசு தேவையில்லாத செலவுகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சோனியா காந்தியின் அமெரிக்க சிகிச்சைக்காக ரூ1880 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
இதைப் பிடித்துக் கொண்ட சுப்பிரமணிய சாமி சமூக வலைதளமான ட்விட்டரில். சோனியா காந்தியின் அமெரிக்க மருத்துவ சிகிச்சைக்கு ரூ1880 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தப் பணத்தை யார் கட்டியது? என்பது குறித்து விரைவில் பொது நலன் வழக்கு தொடர இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால் சோனியாவுக்கு என்ன நோய் என்றோ அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றோ கூறப்படவில்லை.
அதன் பின்னர் பிப்ரவரி 27ம் தேதி மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை யார் கட்டியது என்று அமைச்சர் அம்பிகா சோனியிடம் கேட்கப்பட்டபோது, விரைவில் அறிவிக்கப்படும் என்றார். ஆனால் சொல்லவே இல்லை.
அண்மையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியும் சோனியா அமெரிக்கா சென்று ஒருவாரம் இருந்துவிட்டு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications