இப்படியா ஆபாசமாக ஆடுவது... பிரியங்கா சோப்ராவுக்கு உயர்நீதிமன்றம் விளாசல்!

சென்னையில், கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் மேடையில் தோன்றி ஆடினர். அதிலும் பிரியங்கா சோப்ராவின் ஆட்டத்தில் ஆபாசம் அதிகம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஹாலிவுட்டிலிருந்து கேத்தி பெர்ரியும் வந்து தன் பங்குக்கு ஆடி விட்டுப் போனார். அவருடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் இணைந்து ஆபாச மூவ்மென்ட் வைத்து ஆட்டம் போட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில், ஜெபக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் பொது மேடையில் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் ஆடியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, நடிகர்கள் சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அமிதாப் பச்சன் ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ஒப்பந்தகாரர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படியே அனைவரும் ஆடினர் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், நடன மாஸ்டர்கள் சொல்லி விட்டார்கள் என்பதற்காக பொது இடத்தில் இப்படி ஆபாசமாக, அநாகரீகமாக ஆடுவது சரி என்கிறீர்களா என்று கண்டிப்புடன் கேட்டார். பின்னர் மனுதாரர் சமர்ப்பித்த புகைப்படங்களைக் காட்டி பொது மேடையில் ஆபாசமாக ஆடியதற்கு முகாந்திரம் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications