பொது நுழைவு தேர்வை எதிர்த்து டாக்டர்கள் இன்று மனித சங்கிலி போராட்டம்!
சென்னை: மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவு தேர்வு நடத்துவதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் டாக்டர்கள் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மருத்துவ படிப்புக்கு தேசிய அளவில் தகுதி நுழைவு தேர்வை (என்.இ.இ.டி.), மத்திய அரசு நடத்த உள்ளது. இதனால், தமிழகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனி ஆகிவிடும்.
தேசிய அளவில் எம்.பி.பி.எஸ், எம்.டி., எம்.எஸ். மற்றும் டிப்ளமோ சீட்களை அதிக அளவில் தமிழகம் வைத்துள்ளது. இந்த நுழைவு தேர்வினால் நிறைய சீட்களை தமிழகம் இழக்க நேரிடும்.
எனவே எங்கள் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் அக்டோபர் 3ம் தேதி பகல் 2 மணிக்கு சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய மருத்துவக் கல்லூரிகளில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications