காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது கர்நாடகாவின் கடமை: ஜி.கே.வாசன்
சென்னை: காவிரி நதி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது கர்நாடக அரசின் ஜனநாயக கடமை ஆகும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தேச தந்தை மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகிய தலைவர்களின் உருவப்படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி. தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர், பூவராகன், முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, மகிளா காங்கிரஸ் தலைவி சாய்லட்சுமி, சரஸ்வதி நாலடியார், வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், டி.யசோதா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், மயிலை சி.பெரியசாமி, சென்னை மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ, வெங்கட், கோவிந்தசாமி மற்றும் சவுந்தர் முருகன், கோபண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அனைவரும் மகாத்மா காந்தி பிறந்தநாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது கர்நாடக அரசின் கடமை ஆகும் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது கனவை நனவாக்கும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 4 கோடி பேர் பயன் அடைகிறார்கள்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மீது அவதூறாக குற்றச்சாட்டி உள்ளார். வருகிற தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் உறுதியாக உள்ளனர். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு பிரச்சனையில், பாஜக இரட்டை வேடம் போடுகிறது.
பருவ மழை பொய்த்துவிட்ட நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய பயிர்கள் வாடிப்போய் கிடக்கின்றன. இதனால் இடைக்கால நன்மையாக, உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது. இதை அமல்படுத்த வேண்டியது கர்நாடக அரசின் ஜனநாயக கடமை ஆகும் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications