நில அபகரிப்பு.. கருணாநிதியின் 'முரட்டு பக்தர்' தூத்துக்குடி பெரியசாமி தலைமறைவு!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெண் ஒருவருக்குச் சொந்தமான 19.84 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டதாக தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, அவரது மகன் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பெரியசாமி தலைமறைவாகி விட்டார்.
திமுக தலைவர் கருணாநிதியின் முரட்டு பக்தர் என்று திமுகவினரால் செல்லமாக அழைக்கப்படுபவர் பெரியசாமி. தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக பல காலமாக இருந்து வருபவர். தூத்துக்குடி திமுகவில் அசைக்க முடியாத ஒரு நபர். இவரது மகள் கீதா ஜீவன் திமுக அமைச்சராக இருந்தவர்.
இந்த நிலையில் பெரியசாமி அவரது மகன் ஜெகன் உள்ளிட்ட 13 பேர் மீது நில அபகரிப்புப் புகார் கிளம்பியுள்ளது. தூத்துக்குடி கால்டுவெல் காலணியைச் சேர்ந்தவர் முகமது பாத்திமா. இவருக்கு தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் 19 ஏக்கர் 84 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தூத்துக்குடி மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமி, அவரது மகன் ஜெகன் உள்ளிட்ட 13 பேர் சேர்ந்து போ- ஆவணங்கள் மூலம் தனது நிலத்தை அபகரித்ததாக தூத்துக்குடி தெர்மல் நகர் காவல்நிலையத்தில் முகமது பாத்திமா புகார் செய்தார்.
இதில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. இதையடுத்து நெல்லையில் உள்ள அதிமுக வழக்கறிஞர்கள் சிலர், பெரியசாமியை நிலஅபகரிப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மேலும் அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் பெரியசாமி, அவரது மகன் உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications