எங்க நற்பெயர் களங்கமாகிப் போச்சு... கருணாநிதி மீது 2 அமைச்சர்கள் வழக்கு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீதும், முரசொலி நாளிதழ் மீதும் தமிழக அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி மற்றும் பச்சைமால் ஆகியோர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி மீது 2 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு அமைச்சர்கள், கருணாநிதி மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அரசு கோப்புகளை அமைச்சர்கள் பச்சைமால், என்.ஆர்.சிவபதி ஆகியோரின் குடும்பத்தினர் கையாளுவதாக கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார். இந்த செய்தி முரசொலியில் வந்திருந்தது.
இதையடுத்து, தங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி கருணாநிதி மீதும், முரசொலி ஆசிரியர் செல்வம் மீதும் அமைச்சர்கள் பச்சைமால், என்.ஆர்.சிவபதி ஆகியோர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications