பள்ளி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.. மாணவ மாணவியர் தப்பினர்
நெல்லை: திருநெல்வேலி அருகே தென்கலம் என்ற ஊரில் மாணவ, மாணவியருடன் வந்த பள்ளி வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவமாக அத்தனை பேரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். இதனால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.
தென்கலம் கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் அங்குள்ள ஒரு வேன் மூலம் தாழையூத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று படித்து வருகிறார்கள். நேற்று காலாண்டு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து நேற்று காலை மாணவ, மாணவியர் வேனில் பள்ளிக்குக் கிளம்பினர்.
கீழ தென்கலம் கிராமப் பகுதியில் வேன் வந்தபோது திடீரென அதிலிருந்து கரும்புகை கிளம்பியது. இதையடுத்து டிரைவர் வேனை உடனடியாக நிறுத்தினார். அப்போது பார்த்து வேனில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து டிரைவரும், ஊர் மக்களும் சேர்ந்து வேனில் இருந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை கீழே இறக்கி விட்டனர்.
அடுத்த சில விநாடிகளில் வேனில் பிடித்த தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. இதையடுத்து தண்ணீர் ஊற்றி ஊர் மக்களே தீயை அணைத்தனர். வேன் முழுமையாக எரிந்து போய் விட்டது.
நல்ல வேளையாக எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அனைத்து மாணவ, மாணவியரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.
வேனிலிருந்து விழுந்த மாணவி
இதற்கிடையே, பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அப்பள்ளியின் வேனில் சென்று கொண்டிருந்தனர். நெல்லை வண்ணார்பேட்டையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த வாகனத்தின் கதவு திறந்தது.
இதில் வாகனத்தில் பயணம் செய்த அக்ஷாய் இவாஞ்சல் என்ற 16 வயது மாணவி அதில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications