காவிரி நீரை தர மறுத்தால் கர்நாடகாவிற்கு மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்: சீமான்

தமிழகத்திற்கு காவிரி நீரை அளிக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக, நேற்று ஓசூர் நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சி ஆதரவாளர்கள், தமிழகத்திற்கு காவிரி நீர் கேட்டு கோஷமிட்டனர். நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது,
காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவர் பிரதமர் மன்மோகன்சிங், தமிழகத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரை அளிக்க உத்தரவிட்டார். ஆனால் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறி, காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தை புறக்கணித்தார்.
அதன்பிறகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு வணங்கி, தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடக அரசு. கடந்த 20ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை, மொத்தம் 25 நாட்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். ஆனால் எங்களுக்கே தண்ணீர் இல்லை. அதனால் 3 நாட்கள் மட்டுமே தண்ணீர் தருவோம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.
தமிழகத்தில் தற்போது அதிகளவில் மின்வெட்டு ஏற்படுகிறது. இருந்தாலும் அதை நாங்கள் சமாளித்து கொண்டு, எங்கள் மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 6 லட்சம் யுனிட்டை கர்நாடகத்துக்கு வழங்குகிறோம். நாங்கள் இருட்டில் இருந்து கொண்டு, உங்களுக்கு வெளிச்சம் தர மின்சாரம் தருகிறோம்.
கர்நாடகா எங்களுக்கு சட்டப்படி தர வேண்டிய தண்ணீரை தர மறுத்தால், நாங்களும் இங்கிருந்து செல்லும் மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம். கர்நாடகாவிற்காக நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம். அதற்காக முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
முன்னாள் கர்நாடக முதல்வர் அனுமந்தராவ் தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்த போது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, ராணுவத்தை அனுப்பி தண்ணீரை திறப்போம் என்று கர்நாடக அரசை எச்சரித்தார். அதேபோல தற்போது கர்நாடக அரசை மத்திய அரசு எச்சரிக்குமா? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீரை மீட்க எங்களின் போராட்டம் தொடரும் என்றார்.
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications