பாரதமாதா கோவில் கட்ட உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி: குமரிஅனந்தன்
சென்னை: விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் கனவான பாரதமாதா கோவில் கட்ட உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு, காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விடுதலை போராட்டத்தில் சிறை சென்ற தியாகி சுப்பிரமணிய சிவா தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில், பாரதமாதா கோவில் எழுப்ப எண்ணினார். முந்தைய அரசு சிவா மணி மண்டபம் எழுப்பியது, ஆனால் பாரதமாதா கோவில் கட்டவில்லை.
ஆனால் இந்திய நாட்டின் ஒருமைபாட்டை நிலைநாட்டும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு இதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு ஆணை பிறப்பித்திருப்பதையும், சிவா பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருப்பதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அதையடுத்து இந்திய நாட்டின் ஒருமைபாட்டை நிலை நாட்டும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் பாரத மாதா கோவில் அமைக்க உத்தரவிட்டுள்ள முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒருமைப்பாட்டின் ஒப்பற்ற புனித திருகோவிலாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சிவாவின் கனவை நனவாக்கி காட்டிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications