For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேஜ்ரிவால் கட்சியின் விளம்பரத்துக்காக என்னை கேவலப்படுத்துறாங்க... வாய்திறக்கிறார் வத்ரா

By Mathi
Google Oneindia Tamil News

Robert vadra
டெல்லி: அர்விந்த் கெஜ்ரிவால் தாம் தொடங்கியிருக்கும் கட்சியின் விளம்பரத்துக்காக தம் மீது அவதூறாக புகாரை கூறி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா கூறியுள்ளார்.

டி.எல்.எப். நிறுவனத்துக்கான நிலம் வளைத்துப் போட தமது செல்வாக்கை பயன்படுத்திய ராபர்ட் வத்ரா, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்திருக்கிறார் என்று அர்விந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் தரப்பு குற்றம்சாட்டியிருந்தது.

இதை மறுத்து வத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில். அர்விந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் ஆகியோர் என் மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் வருத்தமளிக்கிறது. தாங்கள் தொடங்கியிருக்கும் புதிய கட்சிக்கான மலிவான விளம்பரம் தேடும் உத்தியாக கெஜ்ரிவாலும் பிரசாந்த் பூஷனும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. அடிப்படை ஆதாரமற்றவை. அவதூறு ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை. கடந்த 21 ஆண்டுகாலமாக நான் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். நான் சட்டத்துக்குட்பட்ட குடிமகன். எனது தொழில் நிறுவனங்களின் கணக்கு விவரங்கள் அனைத்துமே சம்பந்தப்பட்ட துறையினரிடம் வெளிப்படையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. உண்மை என்னவென்று அறிவதற்கு அவற்றை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்று கூறியுள்ளார்.

இதற்கு விரிவான பதில் ஒன்றை அளிக்கப் போவதாக கெஜ்ரிவாலும் பதிலடி கொடுத்திருக்கிறார்!

English summary
Breaking his silence over allegations of illicit links with real estate giant DLF, businessman Robert Vadra today hit back at activists-turned-politicians Arvind Kejriwal and Prashant Bhushan. In a statement , Mr Vadra said, "I am saddened by the attempt of Shri Kejriwal and Shri Bhushan to deliberately misrepresent numbers contained in my financial statements, manufacture lies and malign my family in order to gain cheap publicity for themselves and for the launch of their political party."
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X