திட்டமிட்டபடி நாளை கூடங்குளத்தை முற்றுகையிடுவோம்- உதயக்குமார்
கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டம் நாளை திட்டமிட்டப்படி நடக்கும் என போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.
கூத்தன்குழியில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அணு மின் நிலையத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டம் நாளை 8ம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை.
அணு மின் நிலைய பகுதிக்கு 500 மீட்டர் முன்னதாகவே எங்களது படகுகளை நிறுத்தி முற்றுகை செய்வோம். எவ்வித வன்முறையிலும் ஈடுபடமாட்டோம். இப்போராட்டத்தில் பெண்களும் பங்கேற்பார்கள்.
எங்களது போராட்டம் குறித்து இணையதளத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறிய கருத்துகளை கண்டித்து அவரது எனது உருவ பொம்மையை எரித்து வருகின்றனர்.
அணு உலையை குறித்து பேச சரத்குமார் என்னுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா, என்று கேட்டேன். அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. இதுபற்றி எதுவும் தெரியாமல் அவரது கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் யுரேனியம் நிரப்பி விட்டதாக ஒரு சில அதிகாரிகள் கூறுகிறார்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் யுரேனியம் நிரப்ப 3 மாதம் ஆகும் என்றும், மின் உற்பத்தி செய்ய 1 வருடம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதில் வெவ்வெறு கருத்துகளை அதிகாரிகள் தெரிவித்து வருவதால் யார் சொல்வது உண்மை என்பது தெரியவில்லை. இதனை அதிகாரிகள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் உதயக்குமார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications