மு.க.அழகிரி மருமகளிடம் தீவிர விசாரணை.. அடுத்து மனைவியிடமும் விசாரணை?

Subscribe to Oneindia Tamil

MK Azhazgiri wife
மதுரை: மதுரை கிரானைட் மோசடி தொடர்பான வழக்கில் இதுவரை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகனை 2 முறை விசாரித்த போலீஸார் தற்போது தலைமறைவாக இருந்து வரும் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அடுத்து மு.க.அழகிரியின் மனைவி காந்தியிடமும் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

கிரானைட் மோசடி வழக்கில் சிக்கிய துரை தயாநிதி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரைப் பிடிக்க தற்போது துரை தயாநிதியின் குடும்பத்தார், உறவினர்களை பிடித்து விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

முதலில் துரையின் அக்காள் கணவர் வெங்கடேஷைப் பிடித்து 2 முறை விசாரித்தனர். 2வது அக்காளின் கணவருக்கும் நோட்டீஸ் போயுள்ளது.

இந்த நிலையில் துரை தயாநிதியின் மனைவி அனுஷாவைத் தற்போது பிடித்து விசாரித்துள்ளனர். இன்று காலை அவர் மதுரை புறநகர் எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உடன்பட்டார். அப்போது அனுஷாவின் தந்தை, மாமியார் காந்தி அழகிரி உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

பின்னர் அனுஷாவையும், அவரது தந்தையையும் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். துரை தயாநிதி குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

அடுத்து மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+