தாங்க முடியாத மின்வெட்டு. நள்ளிரவில் வீதியில் இறங்கி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத 15 முதல் 18 மணி நேரம் வரையிலான மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் வீதியில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Power
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் இருந்து வருவதால் பொதுமக்களும் தொழில்நிறுவனங்களும் கடும் பாதிப்புக்குள்ளாக நேரிட்டது. நேற்றும் இந்த உச்சகட்ட மின்தடை அமலில் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நள்ளிரவில் இபிசாலை துணை மின்நிலையம் முன்பாக திரண்டனர். அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகளிடம் மின்வெட்டுக்கான காரணத்தைக் கேட்டனர். ஆனால் உரிய பதிலை அதிகாரிகள் அளிக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சென்ற வாகனங்கள் மறிக்கபட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

அதன் பின்னர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+