குடி கெடிக்கும் பாட்டைப் பாருங்கள்... தண்ணி அடிக்க பணம் தராத தாயை தீர்த்து கட்டிய மகன்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் மது அருந்துவதற்கு பணம் கேட்ட போது, தர மறுத்த தாயை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கருமண்டபம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிராஜன்(60). இவரது மனைவி பவானி(55). இவர்களின் மகன் சிவமுருகன்(30). கட்டிட தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

நேற்றிரவு வேலை முடித்துவிட்டு வழக்கம் போல சிவமுருகன் குடித்துவிட்டு வீ்ட்டிற்கு வந்தார். இரவு 9 மணி அளவில் அப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசி கொண்டிருந்த பெற்றோரிடம் மீண்டும் சென்று குடிக்க, சிவமுருகன் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அவரது தாய் பணம் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவமுருகன், அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பவானியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த பவானியை, காசிராஜன் அப்பகுதியினர் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பவானி பரிதாபமாக இறந்தார். குடி போதையில் தாயை அடித்து கொன்ற சிவமுருகனை, அப்பகுதியினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைந்தனர். திருச்சி கன்டோன்மென்ட் போலீசார், சிவமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+