மு.க.அழகிரி மகனைக் கைது செய்ய பிடிவாரண்ட்.. கோருகிறது போலீஸ்

மதுரை மாவட்டம் மேலூர் சுற்று வட்டாரத்தில் கிரானைட் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் கிரானைட் அதிபர்கள் செல்வராஜ், பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மற்றும் நாகராஜ் உள்ளிட்ட 40 பேர் தலைமறைவாக உள்ளனர்.
அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. துரை தயாநிதியைப் பிடிப்பதற்காக அவரது உறவினர்களை தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
துரை தயாநிதியின் அக்காள் கணவர், மனைவி அனுஷா, மாமனார் சீதாராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தாயார் காந்தி அழகிரியிடமும் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு, மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று ஒரு மனு செய்தார். அந்த மனுவில், கிரானைட் முறைகேடு தொடர்பாக துரைதயாநிதி, நாகராஜ், பி.ஆர்.பழனிச்சாமி மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் தலைமறைவாக இருந்து வருகிறார்கள். எனவே அவர்களை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
நடிகர் ரித்தீஷிடம் விசாரணை
இதற்கிடையே, திமுகவைச் சேர்ந்த நடிகர் ரித்தீஷ் குமாரிடம் மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல முன்னாள் மதுரை துணை மேயர் பி.எம்.மன்னனிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications