என் பாவம் சும்மா விடாது... அதிமுக எம்.எல்.ஏ பரஞ்சோதிக்கு சாபம் விட்ட 2வது மனைவி!
திருச்சி: நானும் அதிமுக எம்.எல்.ஏ. பரஞ்சோதியும் திருமணம் செய்து கொண்டது உண்மை. அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. என்னை மட்டுமல்ல, நிறைய பெண்களை இப்படிதான் ஏமாற்றி கொண்டே வருகிறார் பரஞ்சோதி. அவர் திரும்ப திரும்ப பொய் சொல்லிக் கொண்டே இருந்தால், என்னுடைய பாவம் அவரை சும்மா விடாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் பரஞ்சோதியின் 2வது மனைவி டாக்டர் ராணி.
திருச்சி அதிமுக எம்.எல்.ஏ பரஞ்சோதி. இடையில் சில மாதங்கள் அமைச்சராகவும் இருந்தார். ஆனால் அவர் மீது டாக்டர் ராணி பரபரப்புப் புகார்களை சுமத்தியதைத் தொடர்ந்து பரஞ்சோதியிடமிருந்து அமைச்சர் பொறுப்பை பறித்தார் முதல்வர் ஜெயலலிதா.
திருச்சி கோர்ட்டில், பரஞ்சோதி தன்னை திருமணம் செய்து, என் நகைகளையும் பணத்தையும் அபகரித்து மோசடி செய்து விட்டார் என்றும் ராணி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்றுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக பரஞ்சோதியும் ஆஜராகவில்லை.
இதையடுத்து வரும் 16.10.2012க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து வெளியே வந்த டாக்டர் ராணி செய்தியாளர்களிடம் பேசுகையில், பரஞ்சோதி என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், ஒரு விழாவில் கலந்துகொண்டபோது புகைப்படம் எடுத்ததை வைத்துக்கொண்டு திருமணம் செய்து கொண்டதாக நான் ஏமாற்றுகிறேன் என்று பரஞ்சோதி அபாண்டாக பொய் சொல்லுகிறார்.
ஆனால், நாங்கள் இருவரும் இரண்டாது திருமணம் செய்துகொண்ட பிறகு, கணவன் மனைவியாக உறவினர் ஒருவரின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்தப்படம். இன்னும் வீடியோ ஆதாரங்களும் இருக்கின்றன.
பரஞ்சோதி நிறைய பெண்களை இப்படிதான் ஏமாற்றி கொண்டே வருகிறார். திரும்ப திரும்ப பொய் சொல்லிக் கொண்டே இருந்தால், என்னுடைய பாவம் அவரை சும்மா விடாது என்று கோபமாக கூறினார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications