திருப்பூரில் கன மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
திருப்பூர் : திருப்பூரில் செவ்வாய் கிழமை மாலை பெய்த கனமழையால் வெள்ளநீர் தாழ்வான பகுதிகளில் இருந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
திருப்பூரில் கடந்த ஒரு வாரகாலமாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் செவ்வாய்கிழமை மாலை 4 மணியில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்தன. சில நிமிடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழை இரவு 8 மணிவரை நீடித்தது.
நான்கு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சங்கிலிப்பள்ளம், ஜம்மனைப் பள்ளம் ஆகியவற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. நொய்யல் ஆற்றில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து பெருக்கெடுத்த காரணத்தினால் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் துர்நாற்றம் வீசியதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
கரட்டாங்காடு, பெரிச்சிபாளையம் பகுதிகளில் பாதாளசாக்கடைக்குழிக்குள் நிரம்பிய மழைநீர் கழிவுநீருடன் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது அரைமணிநேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் நேற்று பெய்த கனமழையால் அனல் நீங்கி குளிர்காற்று வீசியதால் திருப்பூர்வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications