திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி அடித்து கொலை!
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் திருவாரூரை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நத்தம் ரகுநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜதுரை(43). இவரை கடந்த 2004ல் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக வலங்கைமான் போலீசார் கைது செய்தனர். பின்பு ராஜதுரை ஜாமீனில் விடுதலையானார்.
இது தொடர்பான வழக்கு வலங்கைமான் நீதிமன்றத்தில் நடைபெறறு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜதுரைக்கு கடந்த 27.8.2008 அன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து ராஜதுரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறையில் உள்ள சில கைதிகளுக்கும், ராஜதுரைக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜதுரை தாக்கப்பட்டதில் உள்காயம் ஏற்பட்டு, சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் திடீரென இறந்து போனார்.
கடந்த 2 நாட்களாக நெஞ்சு வலிப்பதாக ராஜதுரை கூறி வந்துள்ளார். ஆனால் சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications