சீர்காழி: டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் பலி!
சீர்காழி: சீர்காழி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த உடையான்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. விவசாயி. இவரது மகன் சுதீஷ்வரன்(12). இவர் பக்கத்து கிராமமான கொண்டலில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக சுதீஷ்வரன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்கு டாக்டர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், அதே பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.
மேலும் காய்ச்சலுடன் சுதீஷ்வரன் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் மாணவன் சுதீஷ்வரனுக்கு காய்ச்சல் மேலும் அதிகரித்ததால் ஆசிரியர்கள், அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வீட்டுக்கு வந்த சுதீஷ்வரன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதையடுத்து சுதீஷ்வரன், சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
ஏற்கனவே நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவர் இறந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications