17-ம் தேதி மட்டும் பகல் நேரம் 36 மணி நேரமாக நீடிக்கும்?- பீதி கிளப்பும் எஸ்எம்எஸ்!
சென்னை: நேற்று முதல் முழுக்க முழுக்க அநியாயத்துக்கு ஒரு எஸ்எம்எஸ் மக்களை குழப்போ குழப்பென்று குழப்பி வருகிறது.
அதாவது வரும் அக்டோபர் 17-ம் தேதி மட்டும் 36 மணிநேரம், அதாவது ஒன்றரை நாள் தொடர்ந்து பகலாகவே இருக்கும். 2400 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்ச்சி நடக்கிறது - இதுதான் அந்த எஸ்எம்எஸ்!

வட-தென் துருவ பகுதிகளில் தான்...
இந்த எஸ்.எம்.எஸ். தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்தியாவைப் பொறுத்தவரை பகல் நேரம் ஒரு சில நாட்களில் மட்டுமே சில நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் வேறுபடும்.
ஒவ்வொரு 12 மணி நேரமும் பகல்-இரவு என்று மாறி வரும். வட-தென் துருவ பகுதிகளில் தான் பகல்-இரவு நேரங்களில் மாறுபாடு ஏற்படும். இங்கு அதற்கான வாய்ப்பே இல்லை என்று மறுத்தார்.

ஜோதிடர் என்ன சொல்றார்?...
ஜோதிடர் ஒருவரிடம் கேட்டபோது, இப்படியெல்லாம் ஜோதிடத்தில் கூறப்படவே இல்லை. அதுவும் தொடர்ந்து 36 மணி நேரம் பகல் என்பது சாத்தியமில்லை என்றார்.
மேலும் ஏன் தான் இப்படி மக்களை குழப்புறாளோ என்றும் புலம்பினார். எதை வைத்து இப்படி எஸ்எம்எஸ் விட்டார்கள் என்று நம்மிடமே கேட்டார் கோபத்துடன்.

அப்படியெனில் அவர்கள் சும்மா இருப்பார்களா?
இதுகுறித்து பிஎம் பிர்லா கோளரங்கத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறுகையில், துருவப் பகுதியில் ஆண்டுக்கு இரு தினங்கள் இவ்வாறு தொடர்ந்து பகலாகவே நீடிப்பது சாத்தியம்தான்.
ஆனால் இந்தியா போன்ற பூமத்திய ரேகை நாடுகளில் இதெல்லாம் சாத்தியமில்லை. இந்தியாவில் 36 மணிநேரம் பகல் என்றால் அமெரிக்காவில்? 36 மணிநேரம் தொடர் இருள் சூழந்திருக்குமா... அப்படியெனில் அவர்கள் சும்மா இருப்பார்களா?, அதை பல ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிட்டு சொல்லியிருக்க மாட்டார்களா? என்றார்.
அதானே!
குறிப்பு: நான்காண்டுகளுக்கு முன்பும் இப்படியொரு வதந்தி வந்து மறைந்தது நினைவிருக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications