மன்மோகன் சிங் வீட்டை வலம் வரும் 'டெங்கு' கொசுக்கள்
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் தலைநகர் டெல்லியிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங்கின் அலுவலகத்தில் ஏராளமான 'டெங்கு' கொசுக்கள் உலா வருவதாக டெல்லி மாநில சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து டெல்லி மாநில அதிகாரிகள் சோதனை நடத்தியதில் மன்மோகன் சிங் வீட்டில் ஏராளமான டெங்கு கொசு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி டெல்லி முனிசபல் கவுன்சில் சுகாதார அதிகாரிக்கு மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது












Click it and Unblock the Notifications