மதுரவாயல் துப்பாக்கிச் சூடுக்குக் காரணம்.. பெண் விவகாரம் - நடிகர் கைது!
சென்னை: சென்னை மதுரவாயலில் நடந்த துப்பாக்கிச் சூடுக்குக் காரணம் பெண் விவகாரம் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரவாயல் கிருஷ்ணா நகரில் கடந்த 9-ந்தேதி மணிக்குமார் என்ற வாலிபர் துப்பாக்கியால் சுடப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் கீழஈராலை சேர்ந்த இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து சி.டி. கடை வைத்தார். தற்போது ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வந்தார்.
இவரைச் சுட்டது யார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் காயத்திலிருந்து மீண்டு மயக்கம் தெளிந்த மணிக்குமார் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், அந்தோணி என்பவர்தான் தன்னைச் சுட்டதாக தெரிவித்தார். இதையடுத்து 35 வயதான அந்தோணியை கிருஷ்ணகிரியில் வைத்து போலீஸார் பிடித்தனர்.
இவர் ராமாபுரத்தில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஒரு முக்கிய அரசியல் கட்சியில் இளைஞர் அணியிலும் ஒரு பொறுப்பில் உள்ளார். இவரும், மணிக்குமாரும் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். மேலும் இருவரும் பெண் பித்தர்களாகவும் இருந்துள்ளனர். பல பெண்களுடன் இவர்களுக்குத் தொடர்பு இருந்தது.
திடீரென இவர்களுக்குள் பெண் விவகாரம் தொடர்பாக பூசல் வெடித்தது. இந்த மோதலில்தான் அந்தோணி, மணிக்குமாரை சுட்டுள்ளார். அவர் சுட்ட துப்பாக்கியைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அது கள்ளத் துப்பாக்கி ஆகும்.
கைது செய்யப்பட்ட அந்தோணி சினிமாவிலும் நடித்துள்ளாராம். தற்போது ஒரு படத்தில் அவர் ஹீரோவாகவும் நடிக்கிறாராம்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications