டெங்கு காய்ச்சல்: ஈரோட்டில் சிறுவன் பலி- விருதுநகரில் 2 பேருக்கு பாதிப்பு
ஈரோடு: ஈரோட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகரில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களில் அதிகளவில் மக்கள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஆங்காங்கே காண முடிகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள அத்தாணி காலனி என்ற பகுதியை சேர்ந்தவர் தவசியப்பன். இவரது மகன் செலம்பண்ணன்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த செலம்பண்ணன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் மருந்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த செலம்பண்ணன், நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார்.
அதேபோல ஈரோடு என்.எம்.எஸ். காம்பவுண்டு பகுதியை சேர்ந்த சீதா என்பவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சீதா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சீதா உட்பட ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 10 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகரில் பாதிப்பு:
விருதுநகர் மாவட்டம் செங்குன்றபுரத்தை சேர்ந்த ஜெயசீலன் மகள் மகாலட்சுமி(11) மற்றும் குந்தலப்பட்டியை சேர்ந்த முனியசாமி மகன் குப்புசாமி(1) ஆகியோர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இருவருக்கும், பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பீதி காரணமாக தமிழகத்தில் காய்ச்சலால் அவதிப்படுவோர், மருத்துவமனைகளில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications