மனைவி தலையை வெட்டி பைக்கில் கொண்டு வந்து போலீஸில் ஒப்படைத்த கணவர்
வேலூர்: தகாத தொடர்பு வைத்திருந்த மனைவி மீது கோபம் கொண்ட கணவர், மனைவி தலையை வெட்டி தனியாக எடுத்து அதை பையில் வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்து சரணடைந்தார்.
வேலூர், வீரா ரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சாமந்தி. இவர் ராணுவத்தில் டிரைவராக இருக்கிறார். இவரது மனைவி 35 வயதான மாலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
திருமணமாகி 15 வருடங்களாகி விட்டன. ராணுவப் பணியாக போபாலில் தங்கியிருந்தார் சாமந்தி. இதனால் மாலா தனிமையில் வாடியுள்ளார். இந்த நிலையில் இன்னொருவருடன் உறவு ஏற்பட்டு விட்டது. அடிக்கடி தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். தனது வீட்டிலேயே இதை நடத்தி வந்துள்ளார்.
ஒரு நாள் இரவு மாலா உல்லாசத்தில் இருந்தபோது அதை அவரது மாமியார் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது மகனுக்குப் போன் போட்டுத் தகவலைக் கூறி விட்டார். இதையடுத்து மாலாவுக்கும், மாமியாருக்கும் இடையே சண்டையாகி விட்டது. கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார் மாலா.
இதைத் தொடர்ந்து லீவு போட்டு விட்டு ஊருக்கு விரைந்தார் சாமந்தி. தனது மாமியார் வீடு உள்ள குளவிமேட்டுக்குப் போய் மனைவியை அழைத்தார்.ஆனால் அவர் வர மறுத்து விட்டார். இருந்தாலும் விடாமல் நேற்றும் போய் கூப்பிட்டுள்ளார். ஆனால் வர மறுத்ததோடு, கணவரை சரமாரியாக திட்டவும் செய்துள்ளார் மாலா. ஆனால் கோபத்தை அடக்கிக் கொண்டு மறுபடியும் கூப்பிட்டுள்ளார் சாமந்தி. மேலும் தனக்கு சாப்பாடு தருமாறும், மிக்ஸியில் அரைத்துக் கஞ்சி போல தருமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து மிக்ஸியில் சாதத்தைப் போட்டு அரைத்தார் மாலா. அப்போது பின்னால் வந்த சாமந்தி, தான் கையோடு கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து மாலாவின் தலையில் போட்டுள்ளார். இதில் தலை தனியாக போய் விழுந்தது. பரிதாபமாக மாலா உயிரிழந்தார்.
இதையடுத்து தலையை பையில் போட்டு எடுத்துக் கொண்டு தனது பைக்கில் ஏறி, அரியூர் காவல் நிலையம் வந்தார் சாமந்தி. அங்கு போலீஸாரிடம் நடந்ததைக் கூறி தலையை ஒப்படைத்து சரணடைந்தார்.












Click it and Unblock the Notifications