இன்று மகாளாய அமாவாசை: முன்னோர்களின் ஆசிக்காக புனித நீராடிய பக்தர்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
முன்னோர்களின் ஆசி
மகாளயபட்ச காலத்தில் முன்னோர்கள் பூவுலகிற்கு வந்து நம்மை ஆசிர்வதிக்கின்றனர் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி தொடங்கி அமாவசை வரை 15 நாட்களும் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் அன்னதானம் வழங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது. மகாளய அமாவாசை நாளில் கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு பித்ரு தர்பணம் அளிப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.
புனித நீராடிய பக்தர்கள்
மகாளய அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுவதை ஒட்டி ரமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் அளித்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள், தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினர். அதன் பிறகு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் காரணமாக ராமேசுவரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேபோல் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலும், வேதாரண்யம் கடலிலும் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர். திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications