நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவான பேச்சு: 2 இந்து முன்னணியினர் கைது
சென்னை: பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்களையும், நபிகள் நாயகத்தையும் தரக்குறைவாக பேசியதாக வந்த புகாரை அடுத்து இந்து முன்னணி பிரமுகர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பொதுக்கூட்டத்தில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமிய மக்களையும் தரக்குறைவாக பேசியதாக, புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அந்த இந்து முன்னணி பிரமுகர்களை கைது செய்யக்கோரி திங்கட்கிழமை காலை முதல் இரவு வரை புளியந்தோப்பு காவல் நிலையம் முன்பு அனைத்து இஸ்லாமிய மக்களின் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் தரக்குறைவாக பேசிய 2 இந்து முன்னணி பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் புளியந்தோப்பு காவல் நிலையத்தின் முன்பு அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பதற்றம் உருவானது கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர்கள் முருகேசன், சுந்தர்ராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் போராட்டம் நடத்தியவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முற்றுகை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் கலைந்து சென்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications