முளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு வாழ்வளித்தார்
சென்னை: சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட தனியார் செல்போன் நிறுவன அதிகாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகில் உள்ள ஆட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏ.மாரிமுத்து (வயது 28). இவர் சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. மாரிமுத்துவுக்கு ஜி.சகுந்தலா (23) என்ற மனைவியும், 2 மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், மாரிமுத்து கடந்த 14-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் கூட்டுரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையிலுள்ள வேகத்தடையில் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை பொதுமக்கள் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மாரிமுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை மாரிமுத்து மூளைச்சாவு அடைந்தார். இதை கேட்டு அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறியழுதனர்.
பின்னர் மாரிமுத்துவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதைத் தொடர்ந்து மாரிமுத்துவின் கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் எடுத்தனர். மாரிமுத்துவின் உடல் உறுப்புகள் பல பேருக்கு பொருத்தப்பட உள்ளன. இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, மாரிமுத்து இறந்தும் பல பேருக்கு வாழ்வு கொடுத்துள்ளார்' என்று பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications