''டிரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு எனது உடலை எடுக்கவும்''.. தற்கொலை செய்த எலக்ட்ரீசியன்
நாமக்கல்: டிரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு எனது உடலை எடுக்கவும் என்று எச்சரிக்கை கடிதம் எழுதி வைத்த புத்திசாலி எலக்ட்ரீசியன், தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பஷீர் அகமது(64). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நாமக்கலுக்கு குடிபெயர்ந்த பஷீர், நேரு நகரில் சிறிய எலக்ட்ரிக்கல் கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் பஷீர் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் கொக்கி போடப்பட்டு இருந்தது.
இதில் சந்தேகமடைந்த அப்பகுதியினர், அவரது வீ்ட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவரது வீட்டு கதவில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டிருந்தது. அதில், என் மீது இருமுனை மின்சாரம் 440 வாட் பாய்ந்து கொண்டிருக்கிறது. எனவே என்னை தொட வேண்டாம். டிரான்ஸ்பார்மரை 'ஆப்' செய்துவிட்டு வந்து தொடவும். இது என் சொந்த முடிவு தான் என்று எழுதப்பட்டு இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மின் கம்பத்தில் இருந்த கொக்கியை அகற்றிவிட்டு, வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது பஷீர் அகமது, தனது கை மற்றும் உடலில் மின்சார வயரை சுற்றிக் கொண்டு உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பிறகு பஷீர்அகமது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பஷீர்அகமது எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவரது உடலை புதைக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அவர் எழுதி இருந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது,
அன்புள்ள தம்பி ரஷீதுக்கு, நான் எடுத்துள்ள இந்த முடிவு ஒரு ஆண்டிற்கு முன்பே எடுத்தது. எனக்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என் பிள்ளைகளாலும் (அக்தரை தவிர) எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. எனது இறப்புக்கு உண்டான செலவை (இறுதி சடங்கு) செய்வதற்கு கூட அவர்களுக்கு நேரமும், வசதியும் இல்லை.
ஆகவே நீ நமது தம்பிகளுடன் ஆலோசித்து, எனது இறுதி சடங்கை எளிமையான முறையில் நடத்தி முடிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டு கொள்கிறேன். குறிப்பு: கபரஸ்தானில் (சுடுகாடு) கேட்டுக்கு நேராக சென்றால், இடக்கை கடைசியில் புதைக்கவும், வேறு எந்த பக்கமும் போக வேண்டாம், நான் ஏற்கனவே இடத்தை பார்த்து விட்டு வந்து உள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எச்சரிக்கை கடிதம் எழுதிவைத்து விட்டு, உடலில் மின்சாரம் பாய்ச்சி எலக்ட்ரீசியன் தற்கொலை செய்த சம்பவம் நாமக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications