மே மாசமே உலகம் அழியப் போகுதா, மாண்புமிகு விஸ்வநாதன்?!

அதிமுகவின் 41வது ஆண்டு விழாவையொட்டி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விஸ்வநாதன் கூறுகையில், புரட்சித் தலைவருக்குப் பின்னால் இயக்கத்தை அழிக்க எத்தனையோ கபட நாடகத்தை நடத்தி பார்த்தார்கள். ஆனால், புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா அவர்கள் தலைமை ஏற்று கட்சிக்கு புத்துயிர் கொடுத்தார். தமிழகத்தில் 3வது முறையாக முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.
அதிமுக தொடங்கப்பட்டு 41 ஆண்டுகளில் 23 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. திமுக வெறும் 19 ஆண்டுகள் தான் ஆட்சியில் இருந்துள்ளது.
தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள். இதனால் இதனால் மக்களிடம் அம்மாவுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
மின்வெட்டு பிரச்சனைக்கு போராட்டம் நடத்த திமுகவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. கடந்த திமுக ஆட்சியில் மின்சார உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி காணப்பட்டது. புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தவில்லை. மின் வெட்டுக்கு திமுக தான் காரணம் என்றாலும், நமது அம்மா அவர்கள் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வேண்டும். திமுக ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளில் புதிய உற்பத்தி திட்டம் வெறும் 211 மெகாவாட் தான். அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் போடப்பட்டத் திட்டம் 2,034 மெகாவாட் ஆகும்.
இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூரில் 300 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கும். அதேபோல் வல்லூர், நெய்வேலி, தூத்துக்குடி ஆகிய மின் திட்டங்களும் உற்பத்தியைத் தொடங்கிவிடும். இதனால் டிசம்பர் மாதம் முதல் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டு விடும். இறுதியாக ஜூன் மாதத்திற்கு பின்பு தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டே இருக்காது.
இதற்காக மாண்புமிகு அம்மா அவர்கள் புயல் வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனது தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்துள்ளார். திங்கள்கிழமைதோறும் அந்த கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மின் வெட்டுக்கு அம்மா நிச்சயம் நிரந்தர தீர்வு காண்பார். அதுவரை பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் விஸ்வநாதன்.
இவர் பேசிக் கொண்டிருந்தபோது திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கரண்ட் கட் ஆகவில்லை.
ஜூன் மாதம் முதல் எப்படி மின்வெட்டே இல்லாமல் போகும்.. ஒருவேளை மே மாசமே உலகம் அழிஞ்சுருமா!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications