சங்கம் துவங்குவதற்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?- நாமக்கல் பதிவாளரின் கடிதத்தால் குழப்பம்
நாமக்கல்: சங்கம் பதிவு செய்ய அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து, நாமக்கல் மாவட்ட பதிவாளர் அனுப்பிய பதில் கடிதம் சீமானை சீண்டியுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சமூக சேவகர் கார்த்திகேயனும், அவரது நண்பர்கள் சிலரும் கடந்த பல ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகின்றனர். இதனால் சமூக சேவைகளை ஒருங்கிணைத்து ஒரு சங்கம் துவங்க முடிவு செய்துள்ளனர். இதற்கு பதிவு செய்ய மாவட்ட அலுவலகத்தை நாடியுள்ளனர். அப்போது எழுந்துள்ளது தான் இந்த பிரச்சனை.
இது குறித்து நாமக்கல் மாவட்ட சமூக கார்த்திகேயன் கூறியதாவது,
கடந்த 29.6.2012 அன்று தமிழர் மறுமலர்ச்சி இயக்கம் என்ற பெயரை வைக்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் குறித்து தொடங்கினோம். மேலும் சங்கத்தின் பெயர், நோக்கம் ஆகியவற்றை 'டைப்' செய்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்தோம்.
அவர் எனக்கு கொடுத்த கடிதத்தில், பதிவு செய்தல் தொடர்பாக சில சந்தேகங்கள் உள்ளாக கூறி, தமிழகத்தில் சீமான் என்பவரால் மேற்படி பெயரில் சமீபத்தில் அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. எனவே அதனுடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறி நிராகரித்துவிட்டார். இந்த செயல் எங்களை மிகவும் வருத்தம் அடைய வைத்துள்ளது.
சங்கம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் கடிதம் கொடுத்தோம். அது அரசு சட்ட விதிகளுக்கு ஏற்புடையதாக உள்ளது அல்லது இல்லையா என்று தெரிவிக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, தேவையில்லாமல் சீமானை வம்புக்கு இழுத்துள்ளார். எனவே இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications