14 பேரை பலி கொண்டது கனமழை- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: தமிழ்நாட்டில் அடித்து வெளுத்து வரும் வடகிழக்கு பருவமழை மொத்தம் 14 பேரை பலி கொண்டிருக்கிறது. தொடர் மழையால் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தனது உக்கிரத்தை கொட்டி வருகிறது. நேற்று முன் தினம் மழையால் இடிதாக்கி 4 பெண்களும் மின்னல்தாக்கி 2 பெண்களும் உயிரிழந்திருந்தனர்.
சென்னை அயனாவரத்தில் ரமேஷ், தண்டையார்பேட்டையில் மணி ஆகியோர் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து தாக்கியதில் நேற்று உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அலெக்ஸ், சிவகாசி அருகே பாரைப்பட்டியில் தங்கமுனீஸ்வரி, கண்ணன் மற்றும் ஏ. ராமலிங்கபுரத்தில் காளீஸ்வரன் ஆகியோர் நேற்று மின்னல் தாக்கி பலியாகினர்.
இதேபோல் திருத்துறைப்பூண்டியில் அய்யாக்கண்ணு மற்றும் அவரது மருமகன் மகாலிங்கம் ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
தமிழகத்தில் தொடர் கனமழை மற்றும் இடி மின்னலுக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
இந்நிலையில் தொடர் மழையால் விழுப்புரம், திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications