டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம் இடையே திடீர் 'முட்டல்'.. கருணாநிதி பஞ்சாயத்து!

பாலு, மாணிக்கம் இருவருமே ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் சமீப காலமாக இருவருக்கும் இடையே முட்டல் மோதல் அதிகரித்து வருகிறது. பாலுவுக்கு டெல்லியில் நல்ல செல்வாக்கு உள்ளதால் தன்னை மீறி அவர் செயல்பட்டு வருவதாக குமுறியபடி இருந்தார் பழனி மாணிக்கம். இந்த நிலையில் இவர்களது மோதல் தற்போது பகிரங்கமாகியுள்ளது.
நாடாளுமன்ற திமுக குழு தலைவராகவும் உள்ள டி.ஆர்.பாலு விளம்பரத்துக்காக தன்னிச்சையாக ரயில்வே திட்டங்களை அறிவிக்கிறார் என்று பழநிமாணிக்கம் சனிக்கிழமை குற்றம்சாட்டினார். வரும் லோக்சபா தேர்தலில் தஞ்சையில் போட்டியிட டி.ஆர்.பாலு விரும்புவதாகவும், அதன் காரணமாகவே தஞ்சையில் அதிகமாக உழைக்கிறார் என்றும் பழநிமாணிக்கம் புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் பழநிமாணிக்கம் நேற்று சந்தித்தார். அப்போது பாலு குறித்து ஏன் புகார் கூறுகிறீர்கள் என்று கருணாநிதி விளக்கம் கேட்டதாக தெரிகிறது. அப்போது பாலு குறித்து பழனி மாணிக்கம் புலம்பித் தள்ளி விட்டதாக தெரிகிறது.
தஞ்சை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறேன். இதுவரை டி.ஆர்.பாலு அறிவித்த திட்டங்கள் குறித்து என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயலை டி.ஆர்.பாலு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார் என்று பழனி மாணிக்கம் கூறியதாக தெரிகிறது.
பழனி மாணிக்கத்தின் குமுறலைக் கேட்டுக் கொண்ட கருணாநிதி பாலுவிடம் விசாரிப்பதாக கூறியதாக தெரிகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications