பாலத்தை காணோம்! வடிவேல் பாணியில் புகார்: திருடனை மடக்கி பிடித்த போலீஸ்
பிராக்கோ: போஸ்னியா நாட்டில் இரும்பு பாலத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து திருடி சென்ற திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது பிராக்கோ. விளைநிலங்கள் சூழ்ந்த இப்பகுதியில் ஆற்றை கடக்க இரும்பு பாலம் ஒன்று இருந்தது. 40 அடி நீளம் கொண்ட அந்த பாலம் பல டன் எடை கொண்டது. 1980ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தை காணவில்லை என்று அந்த பகுதி மக்கள் புதன்கிழமையன்று போலீசில் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகளை திருடும் நபரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 29 வயதுடைய அந்த திருடனின் வீட்டுக்கு வெளியே திருடப்பட்ட பாலம் இரண்டாக உடைக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.இதையடுத்து அந்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
கழிவு நீர் கால்வாய் மூடிகளை திருடி வந்த திருடன் பெரிய தொகையை சம்பாதிக்கும் நோக்கில், இரும்பு பாலத்தையே அக்கு வேறு ஆணிவேராக பிரித்து எடுத்து சென்றதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications